அரசு பேருந்துகளில் ரூ. 2000-ஐ மாற்றலாமா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
அரசு பேருந்துகளில் ரூ. 2000-ஐ மாற்றலாமா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!
அரசு பேருந்துகளில் ரூ. 2000-ஐ மாற்றலாமா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள ரூ. 2000 நோட்டுகளை திரும்ப இருப்பதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, மற்ற வங்கிகளுக்கும் ரூ. 2000 நோட்டுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது. மேலும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மக்கள் தங்கள் கையில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை மாற்றி கொள்ளுமாறு கூறியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து, ரூ. 2000 நோட்டுகளை வைத்துள்ள மக்கள் அனைவரும் அதனை மாற்றியமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியானது, இதுவரையிலும் ரூ. 2000 நோட்டுகளை மாற்றியமைக்க மட்டுமே அறிவுறுத்தி உள்ள நிலையில், பலர் இந்த ரூ. 2000 நோட்டுகள் செல்லாதோ என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், உடனுக்குடன் கையில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை மக்கள் மாற்றி அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆத்தாடி.., தகதகன்னு கொளுத்தும் கிளாமரில் மின்னுறீங்களே ரேஷ்மா.., அல்லாடிப்போன இளசுகள்!!

இதற்கிடையில், அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் ரூ. 2000 நோட்டுகளை பயணச்சீட்டு பெறுவதற்காக மாற்றி உள்ளனர். ஆனால், பேருந்துகளில் வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அரசு பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ. 2000 நோட்டுகளை இனி ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், பயணிகள் தவிர வெளி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ. 2000-ஐ மாற்ற அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here