RRR திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? – பதட்டத்தில் ரசிகர்கள்!!

0

RRR திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதியில் திரையரங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சமயத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் திரைப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முதன் முதலில் தெலுங்கில் கால் வைத்த தனுஷ் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!!

RRR திரைப்படம்:

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ராஜ மௌலி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக RRR திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதியில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர்.

RRR திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? - பதட்டத்தில் ரசிகர்கள்!!
RRR திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? – பதட்டத்தில் ரசிகர்கள்!!

RRR திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாக தயாராக உள்ள நிலையில் தற்போது ஒரு பூகம்பம் கிளம்பியுள்ளது. தற்போது கொரோனா தாக்கத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல மாவட்டங்களிலும் ஊரடங்கு பிறப்பித்து வருவதால் இந்த திரைப்படம் அறிவித்த தேதியில் திரையரங்கங்களில் வெளியாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படுமா என சரியான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஹைதராபாத்தின் பல தியேட்டர்கள் சுத்தமாக இல்லாததால் சுமார் 170 க்கும் மேற்பட்ட தியேட்டர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here