RRR படத்தை பார்க்க துப்பாக்கியுடன் வந்த ரசிகர் – தியேட்டருக்குள் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் - கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!
திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் - கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!

நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி நேற்று ரிலீசான பான் இந்தியா படமான, RRR திரைப்படத்தை பார்க்க ரசிகர் ஒருவர் தியேட்டருக்குள் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு சம்பவம்:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி நேற்று ரிலீசான திரைப்படம் RRR. சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கொரோனா நெருக்கடி என பலவித பிரச்சனைகளை சந்தித்த இந்த படம் நேற்று பான் இந்திய படமாக 5 மொழிகளில் வெளியானது. பாகுபலி படத்தை இயக்கிய மெகா பட்ஜெட் இயக்குனர் ராஜமவுலி  இந்த படத்தையும் இயக்கினார்.

இந்த படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த படம் திரையிடப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கோதாவரி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, இந்த தியேட்டருக்கு படத்தை பார்க்க வந்த ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். இதை கண்டு, பொதுமக்கள் அஞ்சி ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here