RRB NTPC, MI & RRC Group D தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு..!  முழு தகவல்கள் உள்ளே!!!

0
Indian Railways en-route to becoming Green Railway by 2030

கொரோனா தொற்று காரணமாக மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்த பட்ட பின்னர் தேர்வுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC (No 01/2019), RRC Group D மற்றும் Ministerial & Isolated பிரிவுகளுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பை 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதில் NTPC மற்றும் Ministerial & Isolated பிரிவுகளுக்கான தேர்வுகள் சென்ற ஆண்டு டிசம்பர் முதல் நடைபெற்றது. NTPC இன்  கணினி அடிப்படையிலான 6 வது கட்டத் தேர்வு 2021 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் இத்தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தற்போது தெரிவித்துள்ளது. இனி நடவிருக்கும் தேர்வுகள் குறித்த அட்டவணை கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அறிவிக்கப்படும் என்று அவ்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தமாக 1,40,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here