ஹாட்ரிக் வெற்றி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?? இன்று கொல்கத்தா உடன் மோதல்!!

0

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

ராஜஸ்தான் vs கொல்கத்தா:

ஐபிஎல் 13வது சீசனில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலுவான நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் தேவாதியா என பேட்டிங் அசுர பலத்துடன் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான சேசிங்கில் ஸ்மித் மற்றும் சாம்சன் அரைசதங்கள் மற்றும் தேவாதியா ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் என பந்துவீச்சாளர்களை பதம் பார்த்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரன் சேஸ் ஆக இது உருவெடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸை அணியை பொறுத்தவரை இதுவரை ஆடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இரு அணிகளும் தலா 10 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இதனால் சமபலத்துடன் உள்ள இரு அணிகளும் மோத உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

போட்டி நடைபெற உள்ள துபாய் மைதானத்தில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். துபாயில் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுளளன. அவற்றில், இரண்டு போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்றது. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச அதிக வாய்ப்புள்ளது.

RR vs KKR உத்தேச 11 அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தேவாதியா, டாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூட், ஜெய்தேவ் உனட்கட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here