Friday, May 14, 2021

#RCBvsRR ஐபிஎல் – ராஜஸ்தான் அணியுடன் மோதும் பெங்களூர் வெற்றியை தொடருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Must Read

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது.

பெங்களூர் vs ராஜஸ்தான்:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் மெகா தொடர். தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றி அசத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதே போல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால் இந்த தொடரில் பெங்களூர் அணி மிக எளிமையாக கோப்பையை கைப்பற்றி விடும். இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக அறிமுகமாகியுள்ளார் சஞ்சு சாம்சன். இந்த அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

IPL 2020: RR vs MI Dream11 Predictions, IPL 2020, Rajasthan Royals vs Mumbai Indians: Playing XI, Cricket Fantasy Tips

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்த அணியின் செயல்பாடு முதல் போட்டியை போல் அடுத்த போட்டிகளில் இல்லை, மேலும் பேட்டிங்கில் மிக விரைவாக அனைத்து வீரர்களும் விக்கெட்டை இழந்து வருகின்றனர். எனவே இன்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் இந்த அணி அதிக கவனம் செலுத்தினால் கண்டிப்பாக பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளனர். அதில் இரு அணிகளும் தலா 10 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். 3 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ராஜமாதா கெட்டப்பில் கலக்கிய ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா தற்போது புதிய விதமாக போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர். பாரதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -