பாரதி கண்ணம்மாவில் இருந்து புதிய அத்தியாயத்திற்கு மாறிய ரோஷினி – வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் தற்போது புதுவித கெட்டப்பாக ஆண்டாள் வேடத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. அதாவது கண்ணம்மாவை மட்டுமே டார்கெட் செய்துகொண்டிருந்த வெண்பா அஞ்சலி பக்கம் திரும்பியுள்ளார்.

அதாவது தொடர்ந்து அகிலன் தன்னிடம் முறைத்து கொண்டிருப்பதால் எப்படியும் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்துகொண்டிருக்கிறார் வெண்பா. கண்ணம்மாவிற்கு இத்தனை நாட்கள் என்ன கேடு நினைத்தாலும் கண்ணம்மா அதிலிருந்து தப்பித்து தான் வருகிறார்.

மேலும் தனக்கு எவ்வளவு கொடுமைகள் நடந்தும் தைரியமாக வாழ்ந்து வருகிறார். கண்ணம்மாவை போல தான் இருக்க வேண்டும் என்று பலரும் கூறும் வகையில் அவரது நடிப்பு உள்ளது.

roshini

மேலும் ரோஷினிக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்து வருகிறது அதே போல பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். எப்பொழுது கிளைமாக்ஸ், பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என காத்துக்கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க கண்ணம்மா புதுவித கெட்டப்பாக ஆண்டாள் வேடத்தில் மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here