எதிரணி வீரரை அடித்த கேப்டன் ரொனால்டோ – பந்தை தட்டி விட்டதால் அடித்ததாக விளக்கம்!

0

போர்ச்சுகல் கால்பந்து அணியை சார்ந்த கேப்டன் ரொனால்டோ தனது சக போட்டியாளரான அயர்லாந்து வீரரை அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரல்:

கடந்த போட்டியில் அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் வீரர்கள்  மோதிக்கொண்ட உலகக் கோப்பை தகுதிப் கால்பந்து போட்டி நடைபெற்றது.  அயர்லாந்து  அணியின் கேப்டனாக தாரா ஓஷியாவும், போர்ச்சுகல் அணியின் கேப்டனாக கிறிஸ்டியானோ ரொனால்டவும் களமிறங்கினர்.  இதையடுத்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த போட்டியில், போர்ச்சுகல் சூப்பர் ஸ்டாரான ரொனால்டோ போட்டியின் இறுதி நிமிடங்களில் இரண்டு முறை கோல் அடித்து போர்ச்சுகலில் 2-1 என்ற கணக்கில் வெற்றியை பெற்று தந்தார். இதனை அடுத்து, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது.  இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக இருந்து வருகிறது.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

அதாவது, போர்ச்சுகல் அணியின் கேப்டனும், அயர்லாந்து அணியின் கேப்டனும் உள்ள இந்த வீடியோ தற்போது பெரிய அளவில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. போட்டியின் கடைசி நிமிடத்தில் இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றிருந்தால், இரண்டு அணிகளுக்கும் சம அளவில் பெனால்டி ஷாட்க்கு வாய்ப்பு வழங்கப்படும்.

அப்படி வழங்கப்பட்ட வாய்ப்பில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பெனல்டி ஷாட்க்கு பந்தை குறி வைத்து தயாரான போது, அயர்லாந்து கேப்டன் தாரா ஓஷியா  தன் காலால் அந்த பந்தை எட்டி உதைப்பதும், உடனே ரொனால்டோ அவரை அடிப்பதும் போன்ற செயல்கள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளன.  இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here