இந்தியாவுக்கு வருகை தரும் ரொனால்டோ…, ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!!

0
இந்தியாவுக்கு வருகை தரும் ரொனால்டோ..., ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!!
இந்தியாவுக்கு வருகை தரும் ரொனால்டோ..., ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!!

எதிர்வரும் ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக கால்பந்து நட்சத்திரம் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரொனால்டோ:

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக, AFC சாம்பியன்ஸ் லீக் தொடர் கிளப் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில், இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், கத்தார், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், ஓமன் உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து 26 கிளப் அணிகள் தகுதி சுற்றில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை மோத உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, குரூப் ஸ்டேஜில் தென் கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து 26 கிளப் அணிகளும் விளையாட உள்ளன. இந்த குரூப் ஸ்டேஜ் சுற்றானது, வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் அடுத்த வருடம் மே 18 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் விஷ சாராயம் விற்று சிகிச்சை பெற்றவருக்கான நிவாரண தொகை ரத்து., அதிரடி அறிவிப்பு!!

இதில், கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோவின் அல்-நாசர் அணியும் பங்குபெறும். இதனால், இந்த ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் அல்-நாசர் அணியும், இந்தியாவின் மும்பை சிட்டி அணியும் ஒரே குழுவில் டிரா செய்யப்பட்டால் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தியாவுக்கு வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here