ரொமான்ஸில் கலக்கும் லெஜண்ட் சரவணன் – மிரளவைக்கும் புகைப்படங்கள்!!

0

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் புதிய படத்தின் சண்டை காட்சிகள் முன்னதாக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தின் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணன் புதிய படம்

என்னதான் சினிமா சரியில்லை, நடிகர்கள், நடிகைகள் சரியில்லை என கூறினாலும் சினிமாவை பார்க்காதவர்கள் என்று யாரும் இல்லை. சிறு குழந்தை துவங்கி பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் சினிமா ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சாதாரண மக்கள் ஒவ்வொருவருக்கும் திரையில் தோன்ற வேண்டும், ரசிகர்கள் தங்களை ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்று ஆசை இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் சாதாரண மக்களுக்கு திறமைகள் இருந்தாலும் அந்த ஆசை நிராசையாகவே இருக்கும். மறுபக்கத்தில் பெரிய புள்ளிகள், பணபலம் படைத்தவர்கள், எத்தனை வயதானாலும் அவர்களால் திரைப்படங்களில் நடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன்.

பிரபல மல்யுத்த வீராங்கனை தற்கொலை – பைனலில் தோற்றதால் எடுத்த விபரீத முடிவு!!

லெஜண்ட் சரவணன் நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் பிரபு, விவேக், ரோபோ சங்கர் ஆகியோருடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதுல்லா ஆகியோர் நடித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னாக ஆரம்பித்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டுமாக இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் சண்டை காட்சிகள் கடந்த வாரங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தது. தற்போது மணாலி பகுதிகளில் நடந்து வரும் படப்பிடிப்பில் கதாநாயகிக்கும், நடிகருக்குமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here