தனது பூர்விகத்தை ரீல்ஸ் மூலம் காட்டிய ரோஜா சீரியல் நடிகை… வேற லெவல் பண்றீங்க போங்க!!!

0

சன் டிவி சீரியல்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது ரோஜா சீரியல். இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

தெலுங்கு வெள்ளித்திரையின் மூலம் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தவர் பிரியங்கா நல்கார். அதன் பின்னர் இவர் தமிழிழும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதாவது தீயாய் வேலை செய்யனும் குமாரு, காஞ்சனா 3 உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் இவர் தமிழை விட தெலுங்கில் தான் அதிகளவிலான படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களில் மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தனது பூர்விகத்தை ரீல்ஸ் மூலம் காட்டிய ரோஜா சீரியல் நடிகை... வேற லெவல் பண்றீங்க போங்க!!!
தனது பூர்விகத்தை ரீல்ஸ் மூலம் காட்டிய ரோஜா சீரியல் நடிகை… வேற லெவல் பண்றீங்க போங்க!!!

2010ஆம் ஆண்டு திரைக்கு வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலான போதும் தனக்கென ஒரு அங்கீகாரம் இல்லாமல் தான் இருந்தார். அப்பொழுது அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் ரோஜா சீரியல். இந்த சீரியலில் இவரின் நடிப்பு, இவருக்கும் கதையின் நாயகன் அர்ஜுனுக்கும் இடையேயான காதல் காட்சிகள் ட்ரெண்டான ஒன்றாகும். மேலும் இந்த சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளசுகளை கவர்ந்த ஒன்று சீரியல் ஆகும்.

இந்நிலையில் இதில் ரோஜாவாக அறியப்படும் பிரியங்கா நல்கார், சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியான ஒருவர். இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முதல்வன் படத்தின் தெலுங்கு ரீமேக் பாடலுக்கு அம்மன் கெட்டப்பில் ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here