நடிகை ரோஜாவுக்கு அரசு கொடுத்த முக்கிய அங்கீகாரம் – பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்!!

0
நடிகை ரோஜாவுக்கு அரசு கொடுத்த முக்கிய அங்கீகாரம் - பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்!!
நடிகை ரோஜாவுக்கு அரசு கொடுத்த முக்கிய அங்கீகாரம் - பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் இறங்கிய தொண்டர்கள்!!

பிரபல நடிகையும் ஆந்திராவின் நகரி தொகுதி எம் எல் ஏவுமான நடிகை ரோஜா, மாநில அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அமைச்சரவை மாற்றம்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதி வேட்பாளராக களமிறங்கிய ரோஜா, 2 முறை ஜெயித்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். தற்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால், தற்போது அவரது அமைச்சரவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அவரோடு சேர்த்து 25 புதிய அமைச்சர்கள் இன்று கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இதனை அறிந்த, ரோஜா ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன், பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here