சினிமா, சின்னத்திரைக்கு முழுக்கு போட்ட பிரபல முன்னணி நடிகை – வேதனை தெரிவித்த ரசிகர்கள்

0
சினிமா, சின்னத்திரைக்கு முழுக்கு போட்ட பிரபல முன்னணி நடிகை - வேதனை தெரிவித்த ரசிகர்கள்

நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகல்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலத்தில், நகரி தொகுதியில் ஒய் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற தலைவராக பதவியேற்று உள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவியேற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.

இந்த நிலையில், புதிதாக 24 அமைச்சர்கள் நேற்று மாநில கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய நடிகை, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எனக்கு கொடுத்த இந்த வாய்ப்புக்கு நன்றி என்றும், இதை வாழ்நாளில் மறக்க மாட்டேன், இனி ஆந்திர மாநில மக்களுக்காக அயராது பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். இதுபோக இனி சினிமாவிலும், டெலிவிஷனில் நடிக்கப் போவதில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here