ச்ச .., மாஸ் பண்ணிட்டீங்களே ரோஹித்.., நியூசிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி சாதனை!!

0
ச்ச .., மாஸ் பண்ணிட்டீங்களே ரோஹித்.., நியூசிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி சாதனை!!
ச்ச .., மாஸ் பண்ணிட்டீங்களே ரோஹித்.., நியூசிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி சாதனை!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தால் அதிக சிக்ஸர் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் இவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் குவித்தார். மேலும் இந்த போட்டியில் ரோகித் 4 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த சிக்ஸர் மூலம் நியூசிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்தவர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில்(172) தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது ரோஹித் கப்திலை பின்னுக்கு தள்ளி 176 சிக்சர்களுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டென்னிஸ் பயணத்தை முடித்த ரோஜர் பெடரர்.., கடைசி போட்டியில் தோல்வி.., வருத்தத்தில் ரசிகர்கள்!!

இவர்களுக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் 3 ம் இடத்தில் உள்ளார். மேலும் ரோஹித் இதுவரை 138 T20 போட்டிகளில் விளையாடி 3677 ரன்கள் குவித்துள்ளார். அதில் 328 பவுண்டரி, 176 சிக்ஸர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் T20 போட்டிகளில் 3500 மேல் ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here