
இந்திய அணியானது எதிர்வரும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. தனது சொந்த மண்ணில் உலக கோப்பையை விளையாட உள்ள இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மிகுந்த பலத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் படைத்த சாதனை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ரோஹித் சர்மா 8 சதங்களுடன் 2251 ரன்களும், விராட் கோலி 8 சதங்களுடன் 2172 ரன்களும் எடுத்து அசத்தி உள்ளனர். எதிர்வரும் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்த இரு வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பதம் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்களைத் தேடி மேயர்”: இந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடம் நாளை சந்திப்பு.,