ரோஹித் சர்மாவால் செக்யூரிட்டிக்கு ஏற்பட்ட ஆபத்து…, அந்த மனுஷன் என்னப்பா பண்ணாரு.., வைரலாகும் வீடியோ!

0
ரோஹித் சர்மாவால் செக்யூரிட்டிக்கு ஏற்பட்ட ஆபத்து..., அவரு மேல உங்களுக்கு என்ன கோபம்.., வைரலாகும் வீடியோ!
ரோஹித் சர்மாவால் செக்யூரிட்டிக்கு ஏற்பட்ட ஆபத்து..., அவரு மேல உங்களுக்கு என்ன கோபம்.., வைரலாகும் வீடியோ!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்சர் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த செக்யூரிட்டியை பதம் பார்த்ததற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஹித் செய்த காரியம்!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை எளிதாக கடந்த இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி தற்போது இறுதிப்போட்டிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் ரோகித் சர்மா அடித்த ஒரு சிக்சர் மைதானத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செக்யூரிட்டியின் பின்பக்கத்தில் விழுந்தது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் பந்து செல்லும் திசையை பார்த்துக் கொண்டிருக்க பந்து செக்யூரிட்டியின் பின்புறத்தில் தாக்கியது. இதனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மைதானத்தில் இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அனைத்து ரசிகர்களும் செக்யூரிட்டியின் மேல் உங்களுக்கு என்ன கோபம் ஏன் அவரை தாக்குனீங்க என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here