“பால் பாக்கெட் டெலிவரி செய்த ரோஹித் சர்மா” கேப்டனின் கிரிக்கெட் ஆரம்ப கால நினைவை பகிர்ந்த ஓஜா!!

0
"பால் பாக்கெட் டெலிவரி செய்த ரோஹித் சர்மா" கேப்டனின் கிரிக்கெட் ஆரம்ப கால நினைவை பகிர்ந்த ஓஜா!!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக, சிறு வயதில் அடைந்த போராட்டத்தை குறித்து, இந்தியாவின் முன்னாள் நட்சத்திரம் நினைவு கூர்ந்துள்ளார்.

ரோஹித் சர்மா:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியானது அதிக (5) முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக வலம் வருகிறது. இந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மாவின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து, இந்தியாவின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய முகாமில், என்னுடைய எதிரணியில் தான் ரோஹித் சர்மாவை முதன் முதலாக சந்தித்தேன் என்று ஓஜா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆரம்ப கட்டத்தில் என் மீது ஆக்ரோஷமாக இருந்த ரோஹித், ரஞ்சி டிராபியில் ஒரே அணியில் விளையாடிய போது, அதற்கு மாறுபட்டு இருந்தார் என்று ஓஜா தெரிவித்துள்ளார்.

என்னது.., வடிவேலுவை இயக்குனர் பி.வாசு கொச்சையாக திட்டிட்டாரா? சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடந்தது என்ன.., வெளியான உண்மை சம்பவம்!!

மேலும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரோஹித்திடம், ஒரு முறை உங்க பட்ஜெட் எப்படி கண்ட்ரோலில் இருக்கு என்று நாங்கள்(ஓஜா) கேட்டதற்கு உணர்ச்சி பூர்வமான, அதற்கு ரோஹித், “பால் பாக்கெட் டெலிவரி செய்து தான் கிரிக்கெட் கிட்டுகளை வாங்கினேன்” என்று பதில் அளித்ததாக ஓஜா கூறியுள்ளார். தற்போது ரோஹித், இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்து இருப்பது பெருமையாக உள்ளதாக ஓஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here