கோலியை விட ஆக்ரோஷமான ரோஹித்.., களத்தில் வெளிவந்த உண்மையான முகம்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
கோலியை விட ஆக்ரோஷமான ரோஹித்.., களத்தில் வெளிவந்த உண்மையான முகம்.., அதிர்ச்சியில் கோலி ரசிகர்கள்!!
கோலியை விட ஆக்ரோஷமான ரோஹித்.., களத்தில் வெளிவந்த உண்மையான முகம்.., அதிர்ச்சியில் கோலி ரசிகர்கள்!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தில் பந்து வீச்சாளரை அவமானப்படுத்தியதாக விராட் கோலி ரசிகர்கள் கேப்டன் மீது கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கோலி ரசிகர்கள் கேள்வி!!

ஆசிய கோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறினர். மேலும் அந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய போதிலும் பந்து வீச்சாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஆட்டத்தின் போது அர்ஷ்தீப் சிங் ரோகித் சர்மாவிடம் சென்று சில பில்டர்கள் தேவை என கூறியுள்ளார். ஆனால் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் ரோகித் சர்மா முகத்தை காட்டியதாக கூறியுள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், ரோஹித் அனைத்து போட்டிகளின் போது களத்தில் எப்போதும் டென்ஷனாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் ரசிகர்கள் என்னதான் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒருபோதும் மைதானத்தில் கோலி இப்படி முகத்தை திருப்பிக் கொண்டு பேசியது கிடையாது. ஆனால் ரோகித் சர்மா சொந்த அணி வீரர்களை இப்படி மைதானத்தில் அசிங்கப்படுத்தியது மிகவும் தவறான செயலாக பார்க்கப்படுகிறது.

அவர் ஒரு கேப்டனாக இருந்து கொண்டு இது போன்று செய்வது சரியில்லை. மேலும் ஒரு கேப்டனாக இருந்து அனைத்து டி20 தொடர்களை வென்று அசத்திய போது ஏன் அவரால் ஆசிய கோப்பை தொடரில் மட்டும் வெற்றி பெற்றுக் கொடுக்க முடியவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு ரோகித் சர்மா வரவிருக்கும் டி20 உலக கோப்பையிலாவது வெற்றி பெற்று பதிலடி கொடுப்பாரா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here