என்ன ரோஹித் இதெல்லாம்.., தோனியவே மிஞ்சிட்டீங்களே.., இணையத்தில் ரகளை செய்யும் RCB ரசிகர்கள்!!!

0
என்ன ரோஹித் இதெல்லாம்.., தோனியவே மிஞ்சிட்டீங்களே.., இணையத்தில் ரகளை செய்யும் RCB ரசிகர்கள்!!!
என்ன ரோஹித் இதெல்லாம்.., தோனியவே மிஞ்சிட்டீங்களே.., இணையத்தில் ரகளை செய்யும் RCB ரசிகர்கள்!!!

IPL தொடரில் தோனியை விட ரோஹித் சர்மா தான் அதிக சாதனைகள் படைத்துள்ளதாக RCB ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தோனி VS ரோஹித்

IPL தொடரில் இதுவரை 15 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் நாளை இந்திய மண்ணில் கோலாகலமாக அரங்கேற உள்ளது. அனைத்து அணிகளின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முதல் போட்டியிலே CSK மற்றும் GT அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் RCB ரசிகர்கள் அனைவரும் ரோகித் சர்மா IPL தொடரில் மற்ற கேப்டன்களை விட அதிக ரெகார்ட் வைத்துள்ளார் என கூறுகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தோனி கூட இந்த சாதனையை படைத்ததில்லை என்று பெருமை பேசி வருகின்றனர். அப்படி ரோகித் படைத்த சாதனை என்னவென்றால் IPL தொடரில் ஒரு கேப்டனாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை RCB அணிக்கு வென்று கொடுத்துள்ளார். அதே போன்று அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர், இளம் வயதில் IPL கோப்பையை வென்ற வீரர், IPL போட்டியில் ஒரே ஆட்டத்தில் சதம் மற்றும் ஹைட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் போன்று பல சாதனைகளை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் CSK அணிக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டனாகவும் ரோகித் திகழ்கிறார்.

இந்த நோய்களுக்கான மருந்துகளுக்கு சுங்க வரி கட்டணம் ரத்து., ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு!!!

ஆனால் இந்த சாதனையை தோனி படைத்ததில்லை என RCB ரசிகர்கள் CSK ரசிகர்களை சீண்டி பார்க்கின்றனர். மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் RCB மற்றும் CSK அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் ரோகித் படைத்த பல சாதனைகளை இந்த IPL சீசனில் தோனி நிகழ்த்துவாரா என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here