இதுல கூடவா சாதனை படைப்பீங்க., என்ன ரோஹித் இப்படி பண்றீங்க., ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான கேப்டன்!!

0
இதுல கூடவா சாதனை படைப்பீங்க., என்ன ரோஹித் இப்படி பண்றீங்க., ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான கேப்டன்!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் மோசமாக விளையாடியதன் மூலம் ரோஹித் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடருக்கான முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் 107 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர் இது போன்று செய்வது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இதே போல் செய்து ரசிகர்களை ஏமாற்றினார். இதன் மூலம் ரோகித் ஒரு கேப்டனாக இருந்து மோசமான சாதனையை செய்துள்ளார்.

இருந்த ஒன்னும் போச்சா.., பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா.., T20 உலக கோப்பையில் ஏற்பட்ட சிக்கல்!!

அதாவது இந்த வருடத்தில் நடைபெற்ற T20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய கேப்டன்களில் முதலிடத்தில் உள்ளார். பல சாதனைகள் குவித்த ரோஹித் இதுபோன்று செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலால் அவர் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here