ஐபிஎல் விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா – ரூ.12 லட்சம் அபராதம்!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

ரோஹித் சர்மா:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக போட்டிகளை நேரடியாக காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 137 ரன்களை குவித்தது. இதனை சேஸ் செய்த டெல்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 138 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

#CSKvsKKR ஐபிஎல் போட்டி – வெற்றியை கைப்பற்றுமா சென்னை??

அதாவது இந்த தொடர் மூலம் 90 நிமிடங்களில் 20 ஓவர்களை பந்துவீசி முடிக்க வேண்டும் என்று புதிய விதிமுறை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை அணி பந்துவீச்சில் குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக எடுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏற்கனவே பந்துவீச்சில் தாமதமானதால் சென்னை அணி கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here