கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஐசிசி 2023 உலக கோப்பை தொடரானது மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியானது நாளை (நவம்பர் 19) ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைக்க போகும் சாதனை குறித்து இதில் காணலாம்.
அதாவது ரோஹித் சர்மா இப்போட்டியில் 29 ரன்கள் குவித்தால், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார். மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணியை வழிநடத்தும் 4வது கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார். இது ஒரு பக்கம் இருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தங்களது 7வது ஐசிசி போட்டிகளின் இறுதிப் போட்டியை விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.