அடடா.. விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலைமையா? 11 ஆண்டுகள் கழித்து ரோஹித் எடுத்த முடிவு!!

0
அடடா.. விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலைமையா? 11 ஆண்டுகள் கழித்து ரோஹித் எடுத்த முடிவு!!
அடடா.. விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலைமையா? 11 ஆண்டுகள் கழித்து ரோஹித் எடுத்த முடிவு!!

சர்வதேச தொடர்களின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு T20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய பொறுப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி நீங்க தான் பார்த்துக்கனும்.!

ஆசிய கோப்பை தொடர் இன்னும் முடிவு கட்டத்தை எட்டாத நிலையில் அடுத்ததாக T20 உலக கோப்பைக்கான வீரர்களை உருவாக்கும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் மூலம் அவர் T20 உலக கோப்பையில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுலும், கேப்டன் ரோகித் சர்மாவும் T20 உலக கோப்பையில் கூடுதல் பொறுப்பை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தான் தற்போது அனைத்து தொடர்களிலும் விளையாடி வருகிறார். ஆனால் இவர் சிறந்த வேகத்தில் வீசக்கூடிய திறமையான பந்துவீச்சாளர். இதுவரை சர்வதேச கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி தைரியமாக இவரை பவுலிங் செய்ய வைத்துள்ளார்.

இதேபோன்று தற்போது ரோகித் சர்மாவும் 11 ஆண்டுகள் கழித்து முக்கியமான முடிவை ஒன்றை எடுத்துள்ளார். அதாவது ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு ஓவர் மட்டுமே வீசி ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் T20 உலக கோப்பையில் இவரை பவுலிங் செய்ய வைக்க பயிற்சியாளரும் கேப்டனும் முடிவெடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா மைதானம் பந்து வீச்சாளருக்கு சிறந்த ஆடுகளம் என்பதால் விராட் கோலி குறைந்த வேகத்தில் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ஷாட்கள் ஆடி அதிக விக்கெட் விழ வாய்ப்புள்ளது.

இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்ட ராகுல், ரோஹித் கூட்டணி கோலியை வைத்து காய் நகர்த்த முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி தற்போது தான் நீண்ட வருடங்கள் கழித்து தனது ஃபார்முக்கு திரும்பிக் கொண்டுள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு பணி சுமையை அதிகரித்துள்ளது அவரது ஆட்டத்தை பாதிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் விராட் கோலி ஒருவேளை கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஒரு பந்து வீச்சாளராக உலக கோப்பையில் ஜொலித்தால் அது அவருக்கு இன்னும் நம்பிக்கையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here