தினேஷ் கார்த்திக் VS ரிஷப் பண்ட்.., இருவரில் T20 உலக கோப்பைக்கு யார் முக்கியம்.., வெளிவந்த மாஸ் அப்டேட்!!

0

இந்திய அணியில் உள்ள இரண்டு விக்கெட் கீப்பரில் யார் அணிக்கு வேண்டும் என்பதை பற்றி ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் தான் ஒரு சிறந்த பினிஷராக இருந்து இந்திய அணியை வெற்றி அடைய செய்தார். ஆனால் ரிஷப் பண்டுக்கு ப்ளெயின் 11 னில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் T20 உலக கோப்பை போட்டியில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ரோஹித் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தென்னாப்பிரிக்க தொடரில் இருவருக்கும் களமிறங்கும் வாய்ப்பு கொடுப்போம் . அதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் தான் உலக கோப்பை தொடரில் களமிறக்கப்படுவார்கள்.

மேலும் தற்போதைய சூழலை வைத்து எந்த முடிவையும் கூற முடியாது. எனவே இனி வரும் போட்டிகளின் அடிப்படையிலும், இந்த இரு வீரர்கள் பந்தை எதிர் கொள்ளும் விதத்தை வைத்து தான் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம் என்று ரோஹித் கூறியுள்ளார். இவர் கூறியதை வைத்து பார்க்கும் போது தினேஷ் கார்த்திக் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here