உடற்தகுதியை நிரூபித்த ரோஹித் சர்மா – ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பாரா??

0
Rohit Sharma of India raises his bat after scoring a hundred during the 2nd ODI between India and the West Indies held at the ACA-VDCA Stadium, Visakhapatnam on the 18th December 2019. Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

ஆஸ்திரேலியாவிக்கு எதிரான தொடரில் உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றால்தான் விளையாட அனுமதிக்க முடியும் என ரோகித் சர்மாவிற்கு பிசிசிஐ கூறியிருந்தது. இந்நிலையில் அவர் உடல் தகுதி பெற்றுள்ளார் என சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக விளையாடி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள உடல் தகுதி சோதனைகளில் வெற்றி பெற்றால் தான் ரோகித் சர்மா கலந்து கொள்ள முடியும் என பிசிசிஐ உத்தரவிட்டது. இவ்வுத்தரவை அடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்று நடைபெறும் உடல் தகுதி சோதனையில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். ரோகித் சர்மாவுக்கான உடல்தகுதி சோதனையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

விராட், அனுஷ்கா ஜோடியின் திருமண நாள் இன்று!!

அவருக்கு நடத்திய சோதனை பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமியின் அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். “ரோகித் சர்மா உடல் தகுதி தேர்வில் தகுதி பெற்று வெற்றி பெற்றுவிட்டார். அவர் டெஸ்ட் தொடரில் விளையாட போகிறாரா? இல்லையா? என்பதை பிசிசிஐயும் தேர்வாளர் குழுவும்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளப் போகிறாரா? இல்லையா? என்ற செய்தி எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here