ஐபிஎல்-லுக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வா?? ரோஹித் சர்மாவின் திடீர் முடிவு!!

0
ஐபிஎல்-லுக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வா?? ரோஹித் சர்மாவின் திடீர் முடிவு!!
ஐபிஎல்-லுக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வா?? ரோஹித் சர்மாவின் திடீர் முடிவு!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியில் ஓய்வு குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டு உள்ளது. இதன்படி, இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று குவஹாத்தியில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த இலங்கை அணி, இன்றைய போட்டியை வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதே போல, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தனது சொந்த மண்ணில், இந்த ஆண்டின் முதல் ஒருநாள் போட்டியை வெற்றி பெற முயற்சிக்கும். இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்த பேட்டியில், அதாவது டி20 போட்டியில் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடருக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார். இவர் கூறியதன் அடிப்படையில், இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு பின் ரோஹித் சர்மா டி20 போட்டியில் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here