இந்திய அணியில் தீராத பேட்ஸ்மேன்கள் பிரச்சனை…, நெருக்கடி குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!!

0
இந்திய அணியில் தீராத பேட்ஸ்மேன்கள் பிரச்சனை..., நெருக்கடி குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!!
இந்திய அணியில் தீராத பேட்ஸ்மேன்கள் பிரச்சனை..., நெருக்கடி குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!!

சர்வதேச இந்திய அணியானது, ஆகஸ்ட் மாத இறுதியில் ஆசிய கோப்பை தொடரையும், அக்டோபர் மாதத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடரையும் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையும் வெல்லாமல் ஏமாற்றிய இந்திய அணி எதிர்வரும் இந்த இரு தொடரையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது இடம் என்பது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது, ஒருநாள் தொடரை பொறுத்த வரையில் இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று விளையாட கூடிய வீரராக திகழ்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், இவர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் இந்த 4 வது இடத்தில் யாரை களமிறக்குவது என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது. இது குறித்து ரோஹித் சர்மா, “முதலில் யுவராஜ் சிங் இந்த 4வது இடத்தை கச்சிதமாக பூர்த்தி செய்தார். இவர் சென்ற பின், ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தை தக்க வைத்து கொண்டார். ஆனால், தற்போது காயத்தில் இருந்து மீண்டு உள்ள உடல் தகுதியை பொறுத்தே அணியில் இவரது இடம் இருக்கும். இதனால், சூர்யகுமார் மீது கவனம் திரும்பி உள்ளது. இவர், ஒருநாள் தொடர் குறித்த பல ஆலோசனைகளை மற்றவர்களிடம் இருந்து கேட்டறிகிறார். இருப்பினும், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் நம்பர் 4 இடத்திற்கு அதிக நெருக்கடி இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here