ICC உலகக்கோப்பை போட்டித் தொடர் துவங்குவதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்துள்ளது இந்திய அணி. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. இப்போது காயம் காரணமாக அக்ஷர் படேல் விலகி இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வாய்ப்பு அஸ்வினுக்கு உலகக்கோப்பை தொடரில் பங்குபெறுவதற்கான முயற்சி என்பதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஸ்வினின் கம்பேக் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ‘ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் அஸ்வின் ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சை எந்த நிலையில் வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க நல்ல வாய்ப்பு’ என்று தெரிவித்துள்ளார்.