தோனி இருந்திருந்தா இது நடந்திருக்காது.., அதாம் எல்லாம் போச்சே.., இப்போ புலம்பி என்ன பண்றது!!

0
தோனி இருந்திருந்தா இது நடந்திருக்காது.., அதாம் எல்லாம் போச்சே.., இப்போ புலம்பி என்ன பண்றது!!
தோனி இருந்திருந்தா இது நடந்திருக்காது.., அதாம் எல்லாம் போச்சே.., இப்போ புலம்பி என்ன பண்றது!!

ஆசிய கோப்பை தொடரில் இந்த ஆண்டு நடப்பு சாம்பியனான இந்திய அணி கடந்த ஏழு முறை ஆசிய கோப்பை பட்டத்தை வென்ற போதிலும் இந்த ஆண்டு பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்தத் தோல்விக்கு வீரர்களின் மோசமான ஆட்டமே காரணம் என்று கூறினாலும், சிலர் இந்திய அணியின் கேப்டன் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சரிவர அணியை வழி நடத்தவில்லை என சில கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியின் அறிமுகமாகி இதுவரை பல சர்வதேச தொடர்களில் விளையாடி 17 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். மேலும் ICC யின் மூன்று பட்டங்களையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார். இதுவரை தோனி கேப்டனாக இருந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை படைத்துள்ளது. இந்நிலையில் தோனியின் ரசிகர்கள் அனைவரும் தோனியை போன்றே அணியை வழிநடத்தி வெற்றியை கைப்பற்றும் திறமை தற்போது உள்ள கேப்டன்களில் யாருக்கும் இல்லை என புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு கேப்டனாக தோனி இருந்திருந்தால் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் வருத்தகமாக கூறியுள்ளனர். இந்நிலையில் தோனி இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மென்டராக வர வாய்ப்புள்ளதாக இணையத்தில் சில தகவல்கள் கசிந்து வருகிறது. இதனால் T20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சற்று மன நிம்மதியுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here