நரிக்குறவர் அனுமதி மறுப்பு சர்ச்சை விவகாரம் – ரோகிணி தியேட்டர் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு!!

0
நரிக்குறவர் அனுமதி மறுப்பு சர்ச்சை விவகாரம் - ரோகிணி தியேட்டர் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு!!
நரிக்குறவர் அனுமதி மறுப்பு சர்ச்சை விவகாரம் - ரோகிணி தியேட்டர் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு!!

சிம்பு நடித்த பத்து தல படத்தின் ஓபனிங் ஷோவில் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத காரணம் குறித்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பத்து தல:

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது நடித்த பத்து தல திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், படம் காலை 8 மணியளவில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையின் பேமஸ் தியேட்டரான ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவாக இந்த தியேட்டரில் சும்மாவே கூட்டம் அள்ளும், இப்படி முன்னணி நடிகர்களின் படம் வெளியான சொல்ல வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்பேற்பட்ட அந்த தியேட்டரில் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் ஜாதியை இங்கெல்லாம் எதுக்கு கொண்டு வரீங்க என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் அவர்களை படம் பார்ப்பதற்கு உள்ளே அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.5 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி அறிவிப்பு!!!

அதாவது அவர் கூறியதாவது, பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றது. எனவே இந்த படத்திற்கு 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் சட்டம். அதனால் தான் அவர்களை தடுத்து நிறுத்தினோம். அதன் பின்னர் ரசிகர்களின் சந்தோஷத்தை கெடுக்க கூடாது என்ற ஒரே காரணத்தால் அவர்களை உள்ளே அனுமதித்தோம் என்று விளக்கமளித்துள்ளனர். இதனை தொடர்ந்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் திரையரங்கு பணியாளர்கள் 2 பேர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here