103 பட்டம், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற பிரபல வீரர் ஓய்வு., சச்சினின் உருக்கமான பதிவு!!

0
103 பட்டம், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற பிரபல வீரர் ஓய்வு., சச்சினின் உருக்கமான பதிவு!!
103 பட்டம், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற பிரபல வீரர் ஓய்வு., சச்சினின் உருக்கமான பதிவு!!

உலகின் முன்னணி டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் ஓய்வு செய்தி சக வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி வீரர் ஓய்வு!!

சுவீடன் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த போட்டிகளின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் 103 ஏடிபி பட்டங்களை வென்று குவித்தவர்.

மேலும் ஃபெடரர் சர்வதேச தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 41 வயதான இவர் இதுவரை 1,526 ஒற்றையர் பிரிவில் விளையாடியுள்ளார். அதில் 1,251 போட்டிகளில் வெற்றி பெற்று ரூ.1,042 கோடி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபெடரர் தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் இதுவரை எனக்கு துணையாக இருந்த பயிற்சியாளர் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி கூறியுள்ளார். இந்நிலையில் ரோஜர் பெடருக்கு , ஸ்பெயினை சேர்ந்த சக டென்னிஸ் வீரர் ரபேல் நடால், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் தங்களது உருக்கமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here