ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது 2 வது மற்றும் கடைசி லீக் போட்டியை நேபாளம் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய நேபாள அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் குவித்து அசத்தினர். இதில், குஷால் புர்டெல் 38 ரன்கள், ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுத்து இந்திய பவுலர்களிடம் ஆட்டம் காட்டி விக்கெட் பறிகொடுத்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் தொடர்ச்சியாக களமிறங்கிய பீம் ஷர்கி (7), ரோஹித் பவுடல் (5) மற்றும் குஷால் மல்லா (2) என சொற்ப ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். இதில், 15 வது முதல் 21வது ஓவருக்கு இடையில், 4 ஓவர்களை வீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்தினார். தற்போது, நேபாள அணி 37.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ள போது, மழை குறுக்கிட்டது.