
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய “சந்திரயான் 3”-ஐ தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய “ஆதித்யா எல் 1” விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “சந்திரயான் 2” விண்கலத்தின் திட்ட இயக்குனர் சிவன், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது அவர் கூறுகையில், “விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ மட்டுமல்லாமல் 140 தனியார் நிறுவனங்களும் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. இதன்மூலம் இஸ்ரோவின் வளர்ச்சி எவ் விதத்திலும் பாதிக்காது. அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் கட்டுமான பணி மேற்கொண்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த தேதி வரை விடுமுறை., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளா!!!