என்னது.. அந்த படத்துல நடிச்சது நீங்களா?? ரோபோ சங்கரின் மனைவி நடித்த சூப்பர் ஹிட் படம்!!!

0

ரோபோ சங்கர் மற்றும் அவர் மனைவி பிரியங்காவை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரியங்கா கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முன்பே விக்ரமின் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒரு ஸ்டண்ட் அப் காமெடியனாக தன்னுடைய காமெடி பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். பின்னர் தன் திறமையாலும் விடா முயற்சியாலும் தற்போது அனைவரும் பாராட்டும் வண்ணம் உயர்ந்துள்ளார். ரோபோ சங்கர் சின்ன திரை தாண்டி சினிமாவிலும் தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வருகிறார்.

இவரின் மகள் இந்திரஜாவும் விஜய் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மாவாக கலக்கினார். ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவை நிகழ்ச்சிகளில் நாம் பாத்திருப்போம். ஆனால் பிரியங்கா, 2001 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரமின் தில் படத்தில் நடித்துள்ளார். இவரும் லைலாவும் சேர்ந்து குல்பி ஐஸ் செய்வது போல காட்சியில் நீங்கள் பிரியங்கா சங்கரை பார்க்கலாம். தற்போது அவர் அப்படத்தில் உள்ள போட்டோ இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here