மீண்டும் ‘மூக்குத்தி அம்மன்’…, ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்…,

0
மீண்டும் 'மூக்குத்தி அம்மன்'..., ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்...,
மீண்டும் 'மூக்குத்தி அம்மன்'..., ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த முக்கிய அப்டேட்...,

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி விரைவில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன்

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. ரோடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த பாலாஜி, தனது பேச்சு மற்றும் நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு சிறந்த இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பேண்டஸி ஃபிலிம் என்பதையும் தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர, சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம் ‘ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜி தனது இயக்கத்தில் வெளியான ‘எல்.கே.ஜி’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படங்களின் 2 ஆம் பாகங்களை எடுக்க இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு இப்படியொரு கிளைமேக்ஸா?… இது நல்லா இருக்கே…,

ஒரே மாதிரியான இமேஜுக்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காக வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருவதாகவும் கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும், நடிகர் கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here