இத நீங்க விடவே மாட்டீங்க போல.. நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான ரித்திகா சிங்!!

0

நடிகை ரித்திகா சிங்க், இவர் நடித்து வெளியான திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் இவர் நடத்தும் போட்டோஷூட்களில் பெரும்பாலும் கவர்ச்சி தாண்டவம் ஆடும்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங்க். குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் குத்துசண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கிற்கு இப்படம் நல்ல தொடக்கமாக அமைந்தது.

 

பின்னர் இவரது நடிப்பில் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட இந்த படங்களுக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவரின் ஒ மை கடவுளே படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் ஹிட் அடித்தது.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து போட்டோஷூட் நடத்திய ரித்திகா, சிறிது நாட்களுக்கு முன் குளத்தின் கரையில் அமர்ந்து போட்டோஷூட் நடத்தினார். அந்த போட்டோஷூட்டின் போது இவர் விழுந்து வாரிய வீடியோ கூட ட்ரென்ட் ஆனது. இணையத்தை கலக்கிய அந்த போட்டோஷூட்டை இவர் இன்னும் விடாமல் வித வித பில்டர்களில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்து வருகிறார்.

தற்போது அந்த புகைப்படத்தை பிளாக் அண்ட் ஒயிட் எபெக்ட்டில் வெளியிடுள்ளார் ரித்திகா. இதை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை நீங்க விட மாட்டீங்க போல என கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here