ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

0
ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!
ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபத்தில் பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளாகி இருந்தார். இந்த விபத்தினால், இவரது தலை, முழங்கால், கணுக்கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இவருக்கு ஏற்பட்ட இந்த காயங்களுக்கு, முதலுதவி செய்வதற்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் பின், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில், தலையின் நெற்றி பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, முழங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, டேராடூனில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

“இவர் தான் இந்திய அணிக்கு நிலையான கேப்டன்”…, சுரேஷ் ரெய்னா பளிச் பேட்டி!!

இங்கு இவருக்கு முழங்கால் தசைநார் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இவர், பரிபூரணமாக குணமடைய 6 அல்லது 9 மாதங்கள் கூட ஆகும் என்பதால், ஐபிஎல் தொடரை தொடர்ந்து, ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையையும் ரிஷப் பண்ட் இழக்க நேரிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here