நீச்சல் குளத்தில் நடந்த ரிஷப் பண்ட்…, உடல்நிலை குறித்து வெளியிட்ட நீயூ அப்டேட்!!

0
நீச்சல் குளத்தில் நடந்த ரிஷப் பண்ட்..., உடல்நிலை குறித்து வெளியிட்ட நீயூ அப்டேட்!!
நீச்சல் குளத்தில் நடந்த ரிஷப் பண்ட்..., உடல்நிலை குறித்து வெளியிட்ட நீயூ அப்டேட்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாத இறுதியில், பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளானார். இதனால், தலை, முழங்கால், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டனர். இவர், இந்த காயங்களில் இருந்து பூரணமாக குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் சமீபத்தில், “One step stronger, One step better” என தனது முதல் அடி எடுத்து வைத்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட் தனது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐசிசி தரவரிசை: விராட் கோலி, சுப்மன் கில், அக்சார் பட்டேல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

அதாவது, ரிஷப் பண்ட் நீச்சல் குளத்தில், மெதுவாக நடை பழகுவது போன்ற வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு கேப்சனாக, சிறிய விஷயமோ, பெரிய விஷயமோ இதற்கு இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இவரது, வீடியோவை பார்த்த ரசிகர்கள், கம் பேக் அன் ரிஷப் பண்ட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here