ஐபிஎல் தொடரை இழக்கும் ரிஷப் பண்ட்?? அப்போ டெல்லி அணிக்கு கேப்டன் யார்??

0
ஐபிஎல் தொடரை இழக்கும் ரிஷப் பண்ட்?? அப்போ டெல்லி அணிக்கு கேப்டன் யார்??
ஐபிஎல் தொடரை இழக்கும் ரிஷப் பண்ட்?? அப்போ டெல்லி அணிக்கு கேப்டன் யார்??

கார் விபத்தில் படுகாயம் அடைந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பண்ட்:

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட், சமீபத்தில், டெல்லி-உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தினால், தலை, முழங்கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இவருக்கு நெற்றி பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக, விரைவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும், இவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் சரி ஆவதற்கு பல மாதங்கள் ஆகக்கூடும். இதனால், சில காலங்கள், கிரிக்கெட் விளையாடுவாரா என்பது கேள்வி குறியாகி உள்ளது. ஐபிஎல் லீக்கில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இவர், எதிர்வரும் போட்டியில் பங்கு பெறுவார் என்பது சந்தேகம் தான்.

சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா…, சர்வதேச அளவில் டாப் லிஸ்டில் நுழைந்து அசத்தல்!!

இதனால், டெல்லி அணியானது, 2023 ஐபிஎல் லீக்கில் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த அணி வீரர்களில், டேவிட் வார்னர், பிருத்வி ஷா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் உள்ளனர். இவர்களில் யார், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here