மக்களே கவனம்.., இந்த முக்கிய நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
மக்களே கவனம்.., இந்த முக்கிய நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
மக்களே கவனம்.., இந்த முக்கிய நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் சைத்ரா நவராத்திரியின் 9 வது நாளான ஸ்ரீ ராம நவமி ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பல இந்து கோவில்களில் மஹா விஷ்ணுவின் 7வது அவதாரமான ஸ்ரீ ராம பிரானின் திருமண உற்சவம் அரங்கேறும். தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மாநிலங்களை பொறுத்தவரை கோவில்களில் ஸ்ரீ ராமரின் புகழ் பாடி மகிழ்வார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆண்டு ராம நவமி நாளை (மார்ச் 30) நடைபெற உள்ளதால் நாட்டின் முக்கிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புவனேசுவர், போபால், டேராடூன், அகமதாபாத், காங்டாக், ஹைதராபாத், பெலாபூர், கான்பூர், ஜெய்ப்பூர், சண்டிகர், மும்பை, நாக்பூர், லக்னோ, பாட்னா, சிம்லா, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் நாளை வங்கிகள் செயல்படாது. இருந்தாலும் ATM வித்ட்ராவல் மற்றும் UPI உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் வழக்கம் போல் கிடைக்கும் என அறிவுறுத்தி உள்ளனர்.

“இனி ரிஷப் பண்ட்டுக்கு சரியான மாற்று வீரர் இவர் தான்” அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

மேலும் சென்னை, பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா, புது தில்லி, அகர்தலா, ஐஸ்வால், கவுகாத்தி, அமராவதி, இம்பால், ஜம்மு போன்ற நகரங்களில் நாளை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு தகவலும் https://www.rbi.org.in/ என்ற வலைதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here