பிக்பாஸ் வெற்றியாளர் திடீர் மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

சித்தார்த் ஷுக்லா என்ற பாலிவுட் நடிகர் கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்துள்ளார். கடந்த 40 வருடங்களில் இவர் பல சீரியல்களில் நடித்து உள்ளார். முக்கியமாக இவர் பாலிகா தொலைக்காட்சியில் நடித்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமடைந்தவர். இது மட்டும் அல்லாமல் இவர் பல ரியாலிட்டி ஷோகளிலும் நடித்து உள்ளார். திடீர் என்று இன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது குடும்பத்தினர் இவரை ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர்.

ஆனால், இவர் போகும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறுகின்றனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் முடிந்தது. இந்த சீஸனின் வெற்றியாளர் இவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியினை பொறுத்தவரை மக்களின் மனம் கவர்ந்தவர் மட்டுமே வெற்றி அடைவார். இவர் பலரின் மனங்களை கவர்ந்தவர் என்பதில் மிகை இருக்காது என்று தான் கூற வேண்டும். அப்படி இருக்க, இவரது மரணம் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. இவரது மரணத்திற்கு நடிகர்கள், நடிகைகள் என்று பலர் தங்களது வருத்தங்களை அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here