
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவர் இன்றைய எபிசோட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ராதிகா பாக்கியாவின் வீட்டில் அமர்ந்து கொண்டே தொடர்ந்து பல பிரச்சனைகள் செய்து வருகிறார். இதனால் கோபி யார் பக்கம் பேசுவது என்று தெரியாமல் திணறுகிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவர் இன்றைய எபிசோடில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இந்த சீரியலில் சமீபத்தில் பழனிச்சாமி கேரக்டரில் ரஞ்சித் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். இவரை தொடர்ந்து இப்போது இவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் அதே சேனலில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியலில் கார்த்திக் கிருஷ்ணாவுக்கு அம்மாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேவலம் பணத்துக்காக ராஷ்மிகா மந்தனா செய்த காரியம் – வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!!
ஏற்கனவே பழனிச்சாமி தான் பாக்யாவுக்கு ஜோடி என்று பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது இவரது அம்மாவின் என்ட்ரியால் நெட்டிசன்கள் அனைவரும், இவர் இனி வரும் எபிசோடுகளில் பாக்யாவுக்கு மாமியாராக கூட இருக்கலாம் என்று பேசி வருகின்றனர்.