பணி ஒய்வு பெரும் மேற்கு வங்க தலைமை செயலாளர் – ஆலோசகராக நியமித்த மம்தா பானர்ஜி

0

மேற்கு வங்கத்தின் தலைமை செயலரான அலபன் பந்தோபாத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். கொரோனா காலத்தில் தலைமை செயலரை விடுவிக்க முடியாது என கூறிய மம்தா பானர்ஜி தற்போது அவரை ஆலோசகராக நியமித்துள்ளார்.

அலபன் பந்தோபாத்யாய்:

மேற்கு வங்கத்தின் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய். இன்றுடன் அவரது பணி ஓய்வு அடைகிறது. ஆனால் கொரோனா கால கட்டத்தில் தலைமை செயலரை விடுவிக்க முடியாது என கூறினார். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் அலபன் பந்தோபாத்யாய் ஆஜராகவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் அவர்களை திரும்ப பெரும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பேரிடர் காலத்தில் தலைமை செயலராக புதிய ஒருவரை நியமிப்பதற்கு 3 மாத காலம் நீடிக்கலாம் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது தலைமை செயலாலர் அலபன் பந்தோபாத்யாய் முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு பாராட்டுக்கள் குவித்தவண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here