தமிழகத்தில் TNPSC ஒரே நாளில் செய்த சாதனை.., வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் TNPSC ஒரே நாளில் செய்த சாதனை.., வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் TNPSC ஒரே நாளில் செய்த சாதனை.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் அரசு காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. போட்டித் தேர்வுகள் குறிப்பிட்ட தேதியில் நடந்தாலும் தேர்வு முடிவுகள் வெளியிட மிகவும் தாமதப்படுத்துவதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதிலும் கணினி வழியில் நடக்கும் போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் ஒரே மாதத்திற்குள் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் TNPSC தேர்வாணையம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 போட்டித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. அதாவது நவம்பரில் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வு, டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை நிருபர் தேர்வு மற்றும் மின்துறை ஆய்வாளர் தேர்வு, பிப்ரவரியில் நடந்த சுகாதார அலுவலர் தேர்வு என 4 தேர்வுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கல்யாணம் ஆகாமலும் குழந்தை பெத்துக்கலாம்.., ஊதியத்துடன் விடுமுறை கன்பார்ம்!!

அதேபோல் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். ஆனாலும் தேர்வு முடிவுகள் கால தாமதம் ஆகாமல் குறிப்பிட்ட நாட்களில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தேர்வர்கள் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here