தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்வுகளின் முடிவிலும் தேர்வர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பு கிடங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 3ம் தேதியுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து ஏப்ரல் 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கான முன்னேற்பாடுகளை தற்போது தேர்வுகள் இயக்ககம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஆசிரியர்கள் மற்றும் முகாம்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது.

IPL 2023: முதல் சில போட்டிகளை இழக்கும் CSK ஆல்ரவுண்டர்?? பேட்டிங், பவுலிங் ஏதேனும் ஒன்றிலே கவனம் செலுத்த திட்டமா??

இந்நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் முகாம்களுக்கு வர வேண்டும். விடைத்தாள் திருத்தும் போது அனாவசியமாக அடிக்கடி வெளியே செல்ல கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here