
இந்தியாவில் இருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் காய்ச்சல், இருமல், நீரிழப்பு, சர்க்கரை போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் தயார் செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவை சேர்ந்த 64 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இப்போது மத்திய அரசுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூன் 1 முதல் இனி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்து உட்பட அனைத்து மருந்துகளின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் கட்டாயமாக சோதனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறை?? வெளியான முக்கிய தகவல்!!
அதிலும் மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் உள்ள ஆய்வகத்தில் மருந்தினை சோதனை செய்து சான்றிதழ் வாங்கிய பின்னரே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.