ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் “பட்டர் சிக்கன் மசாலா” ரெஸிபி – வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!

0

குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு பட்டர் சிக்கன் சமைக்கப் போறேன்ன்னு மட்டும் சொல்லி பாருங்க. உங்க குழந்தைங்க ரொம்ப ஜாலி ஆயிடுவாங்க. வெண்ணையில்  வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் ப்ரோடீன் உள்ளது. இது குழந்தைகளோட ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. ஹோட்டல்களில் பிரபலமா உள்ள இந்த பட்டர் சிக்கன் நம்ம வீட்டில் எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 500 g

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 4

இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 2  டீ ஸ்பூன்

சீரகத்தூள் – 1/2 டீ ஸ்பூன்

தயிர் –  4 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணை – 50 gm

முந்திரி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

கசூரி மேத்தி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கேசரி கலர் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், உப்பு, கசூரி மேத்தி, கரம் மசாலா, கேசரி கலர் சேர்த்து  2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை ஒரு பானில் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். ஊறவைத்த மசாலா கலவை மீதம் இருந்தால் அதனை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது ஒரு கடாயில் வெண்ணையை சேர்த்து அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மல்லித்தூள்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.  இப்பொழுது தனியே எடுத்து வைத்த மசாலா கலைவையை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

வெளியே மொறு மொறுனு, உள்ளே ஜூஸியான “சிக்கன் டிக்கா” – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

இப்பொழுது மசாலா வெந்தவுடன் அதில் தனியே வைத்திருக்கும் வெந்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். கடைசியாக அதில் முந்திரி பேஸ்ட் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான “பட்டர் சிக்கன் மசாலா ” ரெஸிபி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here