ரெஸ்ட்ராண்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெசிபி… வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

0

சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைத்திருப்போம், சாப்பிடவும் செய்திருப்போம். மேலும் இந்த அசைவ உணவுகளை கொண்டு செய்யப்படும் ஸ்நாக்ஸ் வகைகள் அதிகம். அதில் ஒன்று தான் மோமோஸ். நாம் இந்த பதிவில் காண இருப்பது சிக்கன் வைத்து செய்யப்படும் ஒரு வகை  மோமோஸ் பற்றி காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்

உப்பு – தேவையான அளவு

கொத்து கறி சிக்கன் – 1/4 கிலோ

வெங்காயம் – 2

முட்டை கோஷ் – 1 கப்

கேரட் – 1 கப்

இஞ்சி – 1 தேக்கரண்டி

பூண்டு – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

நல்ல எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி  மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதை சிறிது ஊற வைக்க வேண்டும். இந்நிலையில் இன்னொரு பாத்திரத்தில் சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.

அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இட்லி கொப்பரையில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here