வனிதா உடன் 3 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணைந்த பாக்கியலட்சுமி நடிகை…!அவங்க அப்பவே அப்படி…,இப்ப சொல்லவா வேணும்???

0

குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதாவது அந்த போட்டோவில், தன்னுடன் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்த வனிதா மற்றும் ஆர்த்தி, கணேஷ் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் உடன் உள்ளார்.

விஜய் டிவியில் மக்களின் பேராதரவோடு இரவு 8.30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பாக்கியாவின் கணவர் கோபியின் முன்னாள் காதலி ராதிகாவாக நடித்து வந்த ஜெனிபர் ஒரு சில காரணங்களால் அந்த சீரியல் விட்டு விலக அந்த வாய்ப்பு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு கிடைத்தது.

 மேலும் இந்த சீரியலில் அவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரமாக இருப்பதால் அதற்கு முன்பு நடித்து வந்த அன்பே வா சீரியலில் இருந்து அவர் விலகினார். மேலும் இவர் கலர்ஸ் தமிழ் டிவியின் அபி டைலர் என்ற சீரியலிலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு பல சீரியல்களில் கமிட்டாகி நடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

இருப்பினும் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் ஒரு ஹோட்டல் திறப்பின் போது பிக் பாஸ் பிரபலமான வனிதா, ஆர்த்தி, கணேஷ், சோனியா அகர்வால், பூனம்  உள்ளிட்ட பலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here