மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு – அமைச்சரவை ஒப்புதல்!!

0

தமிழகத்தில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அமைச்சரவை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை கூட்ட முடிவுகள்:

  • மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வது கடினமான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டிவி வாயிலாக நடத்தப்பட உள்ள வகுப்புகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
    தமிழகத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here